sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அணைகள், மதகுகளை சீரமைக்க 31 கோடி ரூபாய் ஒதுக்கீடு

/

அணைகள், மதகுகளை சீரமைக்க 31 கோடி ரூபாய் ஒதுக்கீடு

அணைகள், மதகுகளை சீரமைக்க 31 கோடி ரூபாய் ஒதுக்கீடு

அணைகள், மதகுகளை சீரமைக்க 31 கோடி ரூபாய் ஒதுக்கீடு


UPDATED : ஜூலை 23, 2011 05:08 PM

ADDED : ஜூலை 23, 2011 05:06 PM

Google News

UPDATED : ஜூலை 23, 2011 05:08 PM ADDED : ஜூலை 23, 2011 05:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : மதகுகள் மற்றும் பல்வேறு சிறு அணைகளை சீரமைக்க, 31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.



தமிழக அரசின் செய்திக் குறிப்பு:நீர்வள நிலவளத் திட்டத்தின் ஒரு அங்கமாக, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பரளையாறு உப வடிநிலத்தின் கீழ் உள்ள முறைசார்ந்த மற்றும் முறைசாரா ஏரிகள் மற்றும் கால்வாய்களை, 31 கோடியே, 86 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் செலவில் புனரமைத்து, நவீனப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இத்திட்டத்தில், 210 மதகுகளை மறு கட்டமைப்பு செய்தல், 54 மதகுகளை சீர்படுத்துதல், 15 சிற்றணைகளை மறு கட்டமைப்பு செய்தல், 14 சிற்றணைகளை சீர்படுத்துதல், 219.872 கிலோ மீட்டர் நீளத்திற்கு கரைகளை பலப்படுத்துதல், 121.715 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய்களை தூர் வாருதல், 12 ஆயிரத்து, 144 மீட்டர் நீளத்திற்கு பாசனக் கால்வாய் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.



இதனால், சிவகங்கை மாவட்டத்தில், மானாமதுரை தாலுகா, விருதுநகர் மாவட்டத்தில், திருச்சுழி தாலுகா, ராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய தாலுகாக்களில் உள்ள, 18 முறைசார்ந்த ஏரிகளின் கீழ் உள்ள, 4,755 எக்டேர் நிலங்கள் மற்றும் அதன், 71 முறைசாரா ஏரிகளின் கீழ் உள்ள, 6,128 எக்டேர் நிலங்களின் பாசன வசதி மேம்பாடு அடையும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us