எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ : பயணிகள் பீதியில் ஓட்டம்
எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ : பயணிகள் பீதியில் ஓட்டம்
ADDED : ஜூலை 30, 2011 07:26 PM
வேலூர்: ஜோலார்பேட்டை அருகே, பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால், பயணிகள் பீதியில் ஓட்டம் பிடித்தனர்.சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரயில், காலை 10 மணிக்கு, வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள கேதாண்டபட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்தது கொண்டிருந்தது.
அப்போது, ரயிலின் இரண்டாவது பெட்டி சக்கரத்தில் திடீரென தீ பிடித்து, புகை வெளியே வந்தது. இதை பார்த்த பயணிகள் அலறியடித்து, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்தனர். பலர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதனால், ரயில் கேத்தாண்டப்பட்டியில் நிறுத்தப்பட்டது.தகவல் அறிந்து ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இதனால், கேத்தாண்டப்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் 20 நிமிடங்கள் ரயில் நிறுத்தப்பட்டது. ரயில் சக்கரத்தில் உள்ள பிரேக் கட்டை சூடானதால், தீ பிடித்து புகை வந்ததாக தெரிகிறது. ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர்.
