ADDED : ஆக 13, 2011 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை பைபாஸ் ரோடு அரசு போக்குவரத்துகழகம் முன், தி.மு.க.,வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் செ.குப்புசாமி முன்னிலையில் தொழிலாளர்கள் கைகலப்பில்ஈடுபட்டனர்.மாவட்டத்தில் உள்ள இச்சங்க பஸ் ஊழியர்கள் நேற்று காலை அ.தி.மு.க., அரசை கண்டித்துதர்ணாவில் ஈடுபட்டனர்.
மாலை 3 மணிக்கு சங்கத் தலைவர் குப்புசாமி வந்தார். அப்போதுதொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாகஇருந்தது. இருப்பவர்களும் சென்றுவிடக்கூடாதுஎன்பதற்காக வருகை பதிவேட்டில் நிர்வாகி ஒருவர் கையெழுத்து பெற ஆரம்பித்தார். இதற்குசிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர், வருகை பதிவேட்டின்ஒரு பக்கத்தை கிழித்ததால் கைகலப்பு ஏற்பட்டது.சங்கத் தலைவர் முன்னிலையில் நடந்த இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்களை சமரசம் செய்தனர்.