sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இ.எஸ்.ஐ. சந்தாதாரர்களுக்குபயோ-மெட்ரிக் கார்டு

/

இ.எஸ்.ஐ. சந்தாதாரர்களுக்குபயோ-மெட்ரிக் கார்டு

இ.எஸ்.ஐ. சந்தாதாரர்களுக்குபயோ-மெட்ரிக் கார்டு

இ.எஸ்.ஐ. சந்தாதாரர்களுக்குபயோ-மெட்ரிக் கார்டு


ADDED : ஆக 28, 2011 02:10 AM

Google News

ADDED : ஆக 28, 2011 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:இ.எஸ்.ஐ.

சந்தாதாரர்கள் இந்தியா முழுவதும் சிகிச்சை பெறும் வகையில் பயோ - மெட்ரிக் கார்டு வழங்கப்பட உள்ளதாக, நெல்லை மண்டல இணை இயக்குனர் எம். கருணாநிதி கூறினார்.நாகர்கோவில் கிளை இ.எஸ்.ஐ. சார்பில் நடைபெற்ற வைர விழாவில் அவர் பேசியதாவது:இ.எஸ்.ஐ.- வைர விழாவையொட்டி, அதன் திட்டங்களில் பெரும் மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. 'பயனாளிக்கு முதலில் சேவை; அதன் பின் சந்தா' என்ற கொள்கை கடைபிடிக்கப்படும். இந்தியா முழுவதும் சிகிச்சை பெறும் வகையில் இ.எஸ்.ஐ. திட்டம் விப்ரோவுடன் இணைந்து 1200 கோடி ரூபாய் செலவில் கம்ப்யூட்டர் மயமாக்கப்படுகிறது. இதன்மூலம் இ.எஸ்.ஐ. சந்தாதாரர்கள் சிகிச்சைக்கு செல்லும் போது பணம் எடுத்து செல்ல வேண்டியதில்லை. அனைத்து விபரங்களும் கம்ப்யூட்டரில் வந்துவிடும்.



இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் கிடைக்காத சிகிச்சைகளை சென்னை அப்பல்போ போன்ற பெரிய ஆஸ்பத்திரிகளிலும் பெற்றுக்கொள்ளலாம். சிகிச்சை கட்டணத்துக்கு உச்சவரம்பு இல்லை. சமீபத்தில் வேலூரில் ஒரு சந்தாதாரருக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் சிகிச்சை கட்டணம் அனுமதிக்கப்பட்டது. இதுபோன்ற உயர் சிகிச்சைகளை பெறுவதற்காக பயோ- மெட்ரிக் கார்டுகள் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும். இதற்காக போட்டோ எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us