sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இலவச மடிக்கணினியில் தமிழ் விசைப்பலகை

/

இலவச மடிக்கணினியில் தமிழ் விசைப்பலகை

இலவச மடிக்கணினியில் தமிழ் விசைப்பலகை

இலவச மடிக்கணினியில் தமிழ் விசைப்பலகை


ADDED : செப் 09, 2011 09:21 PM

Google News

ADDED : செப் 09, 2011 09:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக அரசு வழங்கும் இலவச மடிக்கணினியை (லேப்-டாப்) கிராமப்புற மாணவர்களும் தடையோ, தயக்கமோ இல்லாமல் பயன்படுத்தும் வகையில், அவற்றில் தமிழ் ஒருங்குறியும் (யுனிகோடு), இயங்குமுறையும் (ஆபரேட்டிங் சிஸ்டம்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் பிளஸ் 2, கலை மற்றும் அறிவியல், பொறியியல், பலதொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு, இலவச மடிக்கணினி வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்காக, இந்த நிதியாண்டில், 9.12 லட்சம் மடிக்கணினிகள் வாங்க, 912 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு, அதிகபட்ச பலன் கிடைப்பதற்காக, மடிக்கணினியில் ஏராளமான, அதிநவீன வசதிகள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள, அனைத்து தாலுகாக்களிலும், மூன்று ஆண்டுகளுக்கு இலவச சேவை அளிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட மடிக்கணினி தயாரிப்பு நிறுவனத்தின் கிளை இருக்க வேண்டும்.மடிக்கணினியில் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குமுறைகள் இருக்க வேண்டும். குறுந்தகடு பதிவி (டி.வி.டி., ரைட்டர்), நிழற்படக் கருவி (கேமரா), கம்பியில்லா (ஒயர்லஸ்) 2 ஜி ராம் மற்றும் 320 ஜிபி வன்தகடு (ஹார்டு டிஸ்க்) ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களால், இவற்றைச் சரியான முறையில் பயன்படுத்த முடியுமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.



பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில், 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கிராமப்புறங்களில் இருந்து வருபவர்கள். இவர்களால், ஆங்கிலத்திலேயே இருக்கும் மடிக்கணினி இயங்குமுறைகளை, கையாள முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதற்குத் தீர்வு காணும் வகையில், மேலே கண்ட பல்வேறு வசதிகளோடு, தமிழக அரசு வழங்கும் இலவச மடிக்கணினியில், தமிழ் ஒருங்குறியும், தமிழ் இயங்குமுறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



விசைப்பலகையும் தமிழ், ஆங்கிலம் இரண்டையும் கொண்டிருக்கும். தமிழ் எழுத்துக்கள், எழுத்துருக்கள் (பான்ட்), கணினிக்கு உத்தரவு கொடுக்கப் பயன்படும், 'டூல்ஸ்', கருத்தரங்குகளில் பயன்படுத்தப்படும், 'பவர் பாயின்ட்', கணக்கு வழக்குக்கு உதவும், 'ஸ்பிரட் ஷீட்' உள்ளிட்டவையும் தமிழில் இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், தமிழ்நாடு, 'வெர்ச்சுவல் அகடமி' வசம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் இதற்கான மென்பொருளை வடிவமைத்து, தயாரிப்பாளர்களிடம் தந்துவிட்டனர். அவர்கள், அதை மடிக்கணினியோடு இணைத்து வழங்கியுள்ளனர்.இதனால், கிராமப்புற மாணவர்களும், ஆங்கிலத்தில் புலமை இல்லாதவர்களும், தமிழிலேயே கணினியை கையாள விரும்புபவர்களும், எந்த விதமான தயக்கமும், தடையுமின்றி, இலவச மடிக்கணினியைக் கையாளலாம்.








      Dinamalar
      Follow us