ADDED : செப் 10, 2011 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் :கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது, தி.மு.க.,விற்கு விசுவாசமாக செயல்பட்ட அ.தி.மு.க.,வினர் குறித்து, உளவுப் பிரிவு விசாரித்து வருகிறது.உள்ளாட்சித் தேர்தலுக்கு, அ.தி.மு.க.,வினர் போட்டியிட விரும்புவோரிடம், அந்தந்த மாவட்டத் தலைநகர்களில், விருப்ப மனு வாங்கி வருகின்றனர்.
ஆளும் கட்சி என்பதால், போட்டி கடுமையாக உள்ள நிலையில், கடந்த ஆட்சியில், அ.தி.மு.க.,வில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, கட்சிக்காக விசுவாசமாக இருந்தோர், அப்போது, தி.மு.க.,விற்காக விட்டுக்கொடுத்துப் போட்டியிடாமல் 'வாபஸ்' வாங்கியோர், வெற்றி பெற்றும் தி.மு.க.,வுடன் கைகோர்த்து நின்றறோர் என, உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க.,விற்குச் சாதகமாகச் செயல்பட்டோரின் பட்டியலைத் தயாரித்து வருகின்றனர்.