ADDED : செப் 18, 2011 08:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு, நீதி விசாரணை தேவையில்லை என, தே.மு.தி.க., அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாகத் தகவல் வெளியானது.இதைக் கண்டித்து, மள்ளர் இலக்கியக் கழக மாநில பொறுப்பாளர் சோலை பழனிவேல்ராஜன் தலைமையில், 14 பேர் காலை மதுரை சொக்கிக்குளம் கோகுலே ரோட்டில் உள்ள, மத்திய தொகுதி தே.மு.தி.க., எம்.எல்.ஏ., சுந்தரராஜன் வீட்டை முற்றுகையிட்டனர்.
அவர்களை, தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.