ADDED : செப் 19, 2011 08:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கூடங்குளம் உண்ணாவிரதம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கூடங்குளத்தில் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுடன் மத்திய அமைச்சர் நாராயணசாமி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்துவார் என கூறினார்.