ADDED : அக் 12, 2011 01:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும் எனக்கோரி சென்னை மாநகராட்சிக்கு தி.மு.க., சார்பில் போட்டியிடும் 200 வேட்பாளர்களும் தனித்தனியாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அ.தி.மு.க., வேட்பாளர்களின் பிரசாரம் பயமுறுத்தும் வகையில்உள்ளதாக அவர்கள் தங்களது மனுவில் கூறியுள்ளனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி இக்பால் முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.

