
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடலுக்கு உடற்பயிற்சி போல மனதுக்கு புத்தகம் வாசித்தல். புத்தகம் படிப்பதை பழக்கமாக்கினால் தன்னம்பிக்கை வளரும். மக்களை நல்வழிப்படுத்துவதில் புத்தகம் சிறந்த வழிகாட்டி. உலகில் வாசித்தல், பதிப்பித்தல், அறிவாற்றல் சொத்துகளை பதிப்புரிமை மூலம் பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் ஏப்.
23ல் உலக புத்தகம், பதிப்புரிமை தினம் கொண்டாடப் படுகிறது. புகழ்பெற்ற இலக்கிய வாதிகளான ஷேக்ஸ்பியர், செர்வாண்டிஸ், இன்கா கார்சிலாசோ போன்றோர் 1616 ஏப். 23ல் மறைந்தனர். இவர்களது பங்களிப்பை போற்றும் வகையில் இத்தினம் உருவானது.

