பயங்கரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
பயங்கரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
ADDED : ஏப் 25, 2025 01:00 AM
நாமக்கல்:
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக, நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி
செலுத்தப்பட்டது.
நாமக்கல், அண்ணாதுரை சிலை அருகில் இந்நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட பா.ஜ., தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ராமலிங்கம்
உள்ளிட்ட திரளான பா.ஜ.,வினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும், தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைந்து நலம் பெற
வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது.
பின், துணைத்தலைவர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:
பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரும் நாடுகள் இணைந்து, இந்தியாவில் குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும், பொதுமக்களிடம் சட்ட ஒழுங்கு
பிரச்னையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும், காஷ்மீரின் பகல்ஹாமில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சூழ்நிலையில், படுகொலை சம்பவத்தில்
கொல்லப்பட்ட கப்பல் படை, உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளுக்கு கூட, போலீசார் தடை விதித்துள்ளனர்.
இவ்வாறு கூறினார்.
தேசிய செயற்குழு உறுப்பினர் மனோகரன், கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துகுமார், நகர தலைவர் தினேஷ், நகர பொதுச்செயலாளர் சதீஷ், நகர செயலாளர்
வேல்ராஜ் பெரியசாமி, கல்வியாளர் அணி பிரனவ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.