ADDED : செப் 19, 2011 07:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை கரிமேடு தி.மு.க., மூன்றாம் பகுதி செயலர் ஒச்சுப்பாலு.
தனியார் வங்கி ஊழியர் மோகன்தாஸ்காந்தியிடம் பணம் கேட்டு மிரட்டியது, நகை பட்டறை உரிமையாளர் குமார் இடத்தை அபகரிக்க முயன்ற வழக்கில், கைது செய்யப்பட்டார்.இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த இவரது கூட்டாளிகள் அழகுராஜா, சேட் சிவானந்தம், தணிகைவேல் ஆகியோரை, செப்., 8ல், கரிமேடு போலீசார் கைது செய்தனர்.இதில், அழகுராஜா மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதால், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் உத்தரவிட்டார்.