ADDED : ஆக 12, 2011 10:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்: ரூ.
3 கோடி மதிப்பிலான 6 ஏக்கர் நிலத்தை வெறும் ரூ. 9 லட்சத்துக்கு மிரட்டி எழுதி வாங்கியதாக கோவை மாவட்ட தி.மு.க., துணைச்செயலாளர் ஆனந்தன் மீது 4வது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்ட தி.மு.க., துணைச்செயலாளர் ஆனந்தன். கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (53) என்பவரை மிரட்டி, அவரது ரூ. 3 கோடி மதிப்பிலான 6 ஏக்கர் நிலத்தை வெறும் ரூ. 9 லட்சத்துக்கு எழுதி வாங்கியதாக, ஆனந்தன் மீது கோவை நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை பதிவு செய்த அன்னூர் போலீசார் ஆனந்தனை கைது செய்யக்கோரி, கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனந்தன் மீது ஏற்கனவே நில அபகரிப்பு உள்ளிட்ட 3 புகார்கள் உள்ளன. அவர் தற்போது கோவை சிறையில் உள்ளார்.

