உள்ளடக்கத்திற்கு செல்ல

த.வெ.க., – எம்.எல்.ஏ., வி.எஸ்.பாபுவுக்கு தொடர் சிகிச்சை
த.வெ.க., – எம்.எல்.ஏ., வி.எஸ்.பாபுவுக்கு தொடர் சிகிச்சை
UPDATED : அக் 12, 2026 05:41 PM
ADDED : அக் 12, 2026 05:36 PM

அ நிறம் | அளவு
சென்னை: ‘‘கொளத்துார் தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ., – வி.எஸ்.பாபுவுக்கு, 75 தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,’’ என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
சென்னை கொளத்துார் தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ., – வி.எஸ்.பாபு, மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு காரணமாக, செப்., 9ம் தேதி, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்துறை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வர் விஜயும், அமைச்சர்கள் பலரும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, டாக்டர்களிடம் நேரில் விசாரித்தனர்.
இதுகுறித்து, அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில், ‘‘வி.எஸ்.பாபுவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது,’’ என்றார்.
