தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இ.கம்யூ. – எம்.பி., மகன் தி.மு.க.,வில் ஐக்கியம்

இ.கம்யூ. – எம்.பி., மகன் தி.மு.க.,வில் ஐக்கியம்

இ.கம்யூ. – எம்.பி., மகன் தி.மு.க.,வில் ஐக்கியம்


UPDATED : அக் 08, 2026 07:18 PM

ADDED : அக் 08, 2026 05:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 07:18 PM ADDED : அக் 08, 2026 05:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி., சுப்பராயனின் மகன் பாரதி, தி.மு.க.,வில் இணைந்தது, கம்யூ., கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

திருப்பூர் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக இ.கம்யூ., கட்சியை சேர்ந்த சுப்பராயன் உள்ளார். இவரது மகன் பாரதி, நேற்று, சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.

பின் பாரதி கூறுகையில், “அரசியல் அனுபவம் இல்லாத ஒருவர், நடிகராக இருந்து முதல்வராகி உள்ளார். அரசியலில், ‘பஞ்ச்’ வசனங்கள், அநாகரிக சைகைகள் இடம் பெறுகின்றன. இப்படி, அரசியல் தரம் தாழ்ந்துள்ள நிலையில், அதை உயர்த்த வேண்டிய பொறுப்பு தி.மு.க.,வுக்கு உள்ளது. அதற்காக தி.மு.க.,வில் இணைந்துள்ளேன்,” என்றார்.

இந்நிலையில், இந்திய கம்யூ. – எம்.பி.,யின் மகன், தி.மு.க.வில் இணைந்திருப்பது இடதுசாரி கட்சியினர் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.,வில் இணைந்ததற்கான காரணங்களை, வீடியோவாக பாரதி வெளியிட்ட நிலையில், அதற்கு எதிராக, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

வரும் உள்ளாட்சி தேர்தல் அல்லது லோக்சபா தேர்தலில் வாய்ப்பு பெறுவதற்காக, தி.மு.க.,வில் அவர் இணைந்துள்ளதாகவும், சிலர் விமர்சித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us