ADDED : ஏப் 18, 2024 01:07 AM
சென்னை:நாளை ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில், மாநிலம் முழுதும், 1.90 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது. இதையொட்டி, ஓட்டுச்சாவடிகள் முழுதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணியில், 1.90 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த, 10,000 போலீசார் உள்ளனர்.
அவர்களுடன், துணை ராணுவ படையினர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் ஊர் காவல் படையினரும் உள்ளனர். வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்க கொடி அணிவகுப்பும் நடத்தினர். தொகுதிகளுக்கு தொடர்பு இல்லாத நபர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

