ADDED : செப் 27, 2011 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி :அரியவகை பிரம்ம கமலம் பூக்கள் பழநியில் பூத்துள்ளன.புதுதாராபுரம் ரோட்டில் வசிப்பவர் நாகையா.
எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ள இவர், ஆறு ஆண்டுகளாக பிரம்ம கமலம் செடி வளர்த்து வருகிறார். ஆண்டுக்கு ஒரு முறை, நள்ளிரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ தற்போது பூத்துள்ளது. நாகையா கூறுகையில், ''நள்ளிரவு 12 மணிக்கு, ஒரே செடியில் 11 பூக்கள் பூத்தன. அதிகாலை ஐந்து மணிக்கு, சுருங்கி விட்டன. வெள்ளை நிற பூக்கள் தொடர்ந்து மணம் வீசுகின்றன. அக்கம்பக்கத்தினர் சந்தனம், குங்குமம் வைத்து வழிபடுகின்றனர்,'' என்றார்.