ADDED : ஏப் 28, 2024 06:59 AM

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 1 முதல் நேற்று வரை, 83 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது.
மார்ச் 1 முதல் ஏப்ரல், 27 வரை, இயல்பாக 54.7 மி.மீ., மழை பெய்யும். இந்த ஆண்டு இதுவரை, 9.4 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவை விட 83 சதவீதம் குறைவு.
மார்ச் 1 முதல் நேற்று வரை, சென்னை, செங்கல்பட்டு, கடலுார், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருப்பூர், திருவண்ணாமலை, வேலுார், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஒரு மி.மீ., மழை கூட பெய்யவில்லை.
அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில், 69.7 மி.மீ., மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி மாவட்டத்தில், 55.5; விருதுநகர் 31.7; நீலகிரி 30.7; தென்காசி 30; தேனி 22; மதுரை 16.8; துாத்துக்குடி 14.9; ராமநாதபுரம் 14.5 மி.மீ., மழை பெய்துள்ளது.

