ADDED : பிப் 27, 2026 12:01 AM

கருணையின் சிகரம்
கைபர் பகுதியை சேர்ந்த யூதப்பெண் ஒருவர், நபிகள் நாயகத்தை விருந்துக்கு அழைத்தார். அவரும் அதை ஏற்று தோழர்களுடன் சாப்பிட அமர்ந்தார். அப்போது விஷம் கலந்த மாமிசம் பரிமாறப்பட்டது. ஆட்டின் எந்தப் பகுதியை அவர் விரும்புவார் என அறிந்து, அதில் விஷம் தடவப்பட்டிருந்தது.
அந்தப் பெண் அன்போடு அளித்ததை சிறிது சாப்பிட்டார். அதை நாவால் சுவைக்கும் முன்பே விஷம் இருப்பதை உணர்ந்தார். உடனே தோழர்களிடம், ''இதை சாப்பிடாதீர்கள். விஷம் கலந்துள்ளது'' என்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக பிஷ்ர் இப்னு பரா (ரலி) என்ற தோழர் ஒரு துண்டை சாப்பிட்டதால் விஷ பாதிப்பால் இறந்தார்.
அந்த பெண்ணிடம், ''ஏன் இப்படி செய்தாய்'' எனக் கேட்டார் நாயகம். அதற்கு அவர், ''நீங்கள் இறைவனின் துாதர் என சொல்லி வருகிறீர்கள். அது உண்மையாக இருந்தால் இந்த விஷ உணவு உங்களை ஏதும் செய்யாது என நம்பினேன். அதனால் தான் சாப்பிட அழைத்தேன்'' என்றார்.
இதைக் கேட்ட தோழர்கள், ''இவளை கொன்று விடலாம்'' என ஆர்ப்பரித்தனர்.
''வேண்டாம்'' என தடுத்தார். இப்படி கருணையின் சிகரமாக நடந்தார் நாயகம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:34 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 5:02 மணி

