உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 15, 2026 12:23 AM
அ நிறம் | அளவு
சேலம்: தாராபுரம், காங்கேயம் தொகுதிகளைச் சேர்ந்த த.வெ.க., நிர்வாகிகள், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
தாராபுரம் தொகுதியில் வரும் அக்., 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், த.வெ.க.,வைச் சேர்ந்த திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம், தாராபுரம் தொகுதி, குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலர் பன்னீர்செல்வம், ஒன்றிய துணை செயலர் சிவபாலன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செல்வபிரகாஷ், காங்கேயம் தொகுதி, குண்டடம் வடக்கு ஒன்றிய காடையூர் கிளை துணை அமைப்பாளர் பரணி பிரசாத் ஆகிய நிர்வாகிகள், த.வெ.க.,வில் இருந்து விலகினர்.
இவர்கள் அனைவரும், சேலம் -நெடுஞ்சாலை நகரில் உள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் இல்லத்தில், அவரை சந்தித்து அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
