உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 15, 2026 12:23 AM

அ நிறம் | அளவு
சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, மத்திய அரசின் 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்பு அளித்தனர்.
முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு குறித்து, மத்திய புலனாய்வு அமைப்புகள் ஆய்வு கூட்டம் நடத்தின. இதில் எடுத்த முடிவின்படி, பன்னீர்செல்வத்திற்கு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. தற்போது, 'எக்ஸ்' பாதுகாப்பு வழங்கப்பட்டு, இரு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பன்னீர்செல்வம் தற்போது தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
