sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தாம்பரம் - புதுடில்லி உட்பட 8 ரயில் போக்குவரத்தில் மாற்றம்

/

தாம்பரம் - புதுடில்லி உட்பட 8 ரயில் போக்குவரத்தில் மாற்றம்

தாம்பரம் - புதுடில்லி உட்பட 8 ரயில் போக்குவரத்தில் மாற்றம்

தாம்பரம் - புதுடில்லி உட்பட 8 ரயில் போக்குவரத்தில் மாற்றம்


ADDED : ஜூலை 12, 2024 11:44 PM

Google News

ADDED : ஜூலை 12, 2024 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:எழும்பூர் ரயில்வே யார்டில் மேம்பாட்டு பணி நடக்க உள்ளதால், எட்டு விரைவு ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 மதுரை - நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி, நள்ளிரவு 12:55 மணி விரைவு ரயில், நாளை மாற்றுப்பாதையாக, செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூர் வழியாக இயக்கப்படும். தாம்பரம், எழும்பூர் நிலையம் வராது

 லோக்மானிய திலக் - காரைக்கால் மதியம் 1:15 மணி வாராந்திர ரயில், இன்று திருத்தணி, செங்கல்பட்டு வழியாக செல்லும். பெரம்பூர், எழும்பூர், தாம்பரம் நிலையங்களுக்கு செல்லாது

 நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள், அதிகாலை 5:20 மணி வாராந்திர ரயில், இன்று பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, விழுப்புரம் வழியாக இயக்கப்படும்

 திருச்சி - குஜராத் ஆமதாபாத், அதிகாலை 5:40 மணி சிறப்பு ரயில், மாற்றுப்பாதையாக செல்வதால், எழும்பூர் ரயில் நிலையத்தில் நிற்காது. கடற்கரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்

 செங்கல்பட்டு - தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா, நாளை மாலை 3:35 மணி விரைவு ரயில் மாற்றுப்பாதையில் செல்வதால், எழும்பூரில் நிற்காது. கடற்கரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்

 செங்கல்பட்டு - ஆந்திர மாநிலம் காக்கிநாடா, நாளை மாலை 4:00 மணி விரைவு ரயில் மாற்றுப்பாதையில் செல்வதால், எழும்பூரில் நிற்காது. கடற்கரை நிலையத்தில் நின்று செல்லும்

 தாம்பரம் - புதுடில்லி நாளை மாலை 5:00 மணி ஜி.டி.விரைவு ரயில் மாற்றுப்பாதையில் செல்வதால் எழும்பூரில் நிற்காது. கடற்கரை நிலையத்தில் நின்று செல்லும்

தாம்பரம் - தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத், நாளை மாலை 5:30 மணி விரைவு ரயில், மாற்றுப்பாதையில் செல்வதால் எழும்பூரில் நிற்காது. கடற்கரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us