ADDED : செப் 04, 2024 11:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: முதல்வர் ஸ்டாலின், அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு நேற்று சென்றார்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக, கடந்த மாதம் 27ம் தேதி அமெரிக்கா சென்றார். துபாய் வழியே அமெரிக்கா சென்ற முதல்வர், அங்குள்ள சான்பிரான்சிஸ்கோ மாகாணத்திற்கு சென்று, முதலீட்டாளர்களை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டார்.
அங்கிருந்து சிகாகோ நகருக்கு நேற்று சென்றார். அவருக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 'சிகாகோ நகருக்கு வந்த தனக்கு, பேரன்பை பொழிந்து வரவேற்று நெகிழ வைத்த, தமிழ் உடன்பிறப்புகளுக்கு நன்றி' என, முதல்வர் தன் சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.