ஓய்வில்லாமல் உழைக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின் உருக்கம்
ஓய்வில்லாமல் உழைக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின் உருக்கம்
UPDATED : மார் 01, 2025 09:34 AM
ADDED : பிப் 28, 2025 11:19 PM

சென்னை: 'கருணாநிதி வழியில் ஒய்வில்லாமல் உழைக்கிறேன்' என சென்னையில் நடந்த பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தனது பிறந்தநாளையொட்டி சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உங்களால் தான் நான் முதல்வர் ஆனேன். மற்ற மாநில மக்கள் வியந்து பார்க்கிற வகையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறோம். இதனை பா.ஜ.,வால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கருத்தியல் கூட்டணி அமைத்துள்ள எங்களுக்குள் கருத்து மாறுதல் வரும். விரிசல் வராது.
விரிசல் வருமென எதிர்பார்ப்புகள் இருக்கலாம். உங்கள் எண்ணத்தில் மண் விழுமே தவிற விரிசல் வராது. கருணாநிதி வழியில் நான் ஓய்வு இல்லாமல் தொடர்ந்து உழைத்து வருகிறேன். லோக்சபா தொகுதி குறைப்பு சம்பந்தமாக வரும் 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும். கல்வியை சீர்குலைக்க தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த சொல்கிறார்கள். கல்விக்கான நிதியை கூட மத்திய அரசு வழங்க மறுத்து வருகிறது. ஹிந்தியை எங்கள் மேல் திணிக்காதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.