ADDED : ஏப் 25, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் இருந்து சென்னை, பெரம்பூர் வழியாக கர்நாடகா மாநிலம், எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்ற வெளியிட்ட செய்திக்குறிப்பு:
★ பிரயாக்ராஜில் இருந்து வரும் 28, மே 5, 12, 19, 26, ஜூன் 2, 9, 16, 23, 30ம் தேதிகளில் இரவு 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த 3வது நாளில் எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு செல்லும்
★ எஸ்.எம்.வி.டி., பெங்களூருவில் இருந்து, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26ம் தேதிகளில் காலை 7:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு 10:50 மணிக்கு பிரயாக்ராஜ் செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

