தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'பருப்பு சில்லரை விற்பனையாளர்கள் நியாயமான அளவில் லாபம் ஈட்டணும்'

'பருப்பு சில்லரை விற்பனையாளர்கள் நியாயமான அளவில் லாபம் ஈட்டணும்'

'பருப்பு சில்லரை விற்பனையாளர்கள் நியாயமான அளவில் லாபம் ஈட்டணும்'


ADDED : ஜூலை 18, 2024 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2024 02:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் சென்னா பருப்புகளின் சில்லரை விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால், சில்லரை விற்பனையாளர்கள் நியாயமான அளவில் லாபம் ஈட்ட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மொத்த விலை சந்தைகளில், கடந்த மாதம் மட்டும் இந்த பருப்புகளின் விலை, கிட்டத்தட்ட நான்கு சதவீதம் வரை குறைந்த நிலையில், சில்லரை விற்பனையாளர்கள் விலையை குறைக்காமல் பழைய விலையிலேயே விற்பனை செய்து வருகின்றனர். இதனால் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதையடுத்து, இதுதொடர்பாக இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கத்துடன் விவாதிக்க, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை சமீபத்தில் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

அக்கூட்டத்தில் பேசிய துறையின் செயலர் நிதி கரே தெரிவித்ததாவது:

கடந்த ஒரு மாதத்தில் மட்டும், முக்கிய மண்டிகளில் சென்னா, துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் விலை நான்கு சதவீதம் வரை குறைந்துள்ளது.

ஆனால் சில்லரை விற்பனை விலையில் இந்த மாற்றம் பிரதிபலிக்கவில்லை. இதன் வாயிலாக சில்லரை விற்பனையாளர்கள் அதிக லாபம் ஈட்டுகின்றனர் என்பது தெரிய வருகிறது.

இதனால் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மக்களுக்கு மலிவு விலையில் பருப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய, சில்லரை விற்பனையாளர்கள் நியாயமான அளவில் லாபம் ஈட்ட வேண்டும்.

பரிந்துரைக்கப்பட்ட இருப்பு வரம்புகள் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், அனைத்து சில்லரை விற்பனையாளர்களின் இருப்புகளையும் அரசு கண்காணித்து வருகிறது.

அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி சேமித்து வைத்திருப்பவர்கள் மற்றும் கூடுதல் லாபம் ஈட்டுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us