ADDED : ஜூலை 11, 2024 09:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அவதூறு வழக்கில் யுடியூப்பர் சாட்டை துரைமுருகனை கோர்ட் காவலில் அனுப்ப நீதிபதி மறுத்ததையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
பிரபல யுடியூப்பரும் நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சாட்டை துரைமுருகன்,  இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும். தமிழக அரசு குறித்தும் அவதூறாக பேசி மேடையில் பாடியதாக  கைது செய்யப்பட்டார்.
போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருச்சி கணினி குற்றப்பிரிவு கோர்ட்டில் ஆஜர்படுத்தபடுத்தினர். அவரை  கோர்ட் காவலில் அனுப்ப நீதிபதி மறுத்தார். இதையடுத்து சாட்டை துரைமுருகனை போலீசார் விடுவித்தனர். தம் மீதான வழக்கை  ரத்து செய்ய நீதிமன்றத்தை நாடுவேன் என தெரிவித்துள்ளார்.

