மின்தடையில் ஏற்படாத உடன்பாடு:அமைச்சர் பன்னீர்செல்வத்தின் தொகுதிக்கு உட்பட்ட போடி நகராட்சி அ.தி.மு.க., வேட்பாளராக நகர துணை செயலாளர் பழனிராஜன் முதலில் அறிவிக்கப்பட்டார். அமைச்சர் பன்னீர்செல்வம் பரிந்துரை செய்தார்.மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், பரிந்துரையில், அவர் மாற்றப்பட்டு, நகர செயலாளர் பாலமுருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் ஏற்பட்ட அதிருப்தியில், அவரது சமுதாய மக்கள் வற்புறுத்தலால், பழனிராஜன் சுயேச்சையாக களம் இறங்கி உள்ளார்.
முன்னாள் நகராட்சி துணை தலைவர் சேதுராம், சீட் கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அமைச்சரின் தொகுதி என்பதால், இது அவருக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இருவரையும் வாபஸ் பெறச்செய்யும் முயற்சியில் அமைச்சர் இறங்கி உள்ளார். இதற்கான, பேச்சுவார்த்தை அமைச்சர் தலைமையில் நடந்தது. அப்போது மின்தடை ஏற்பட்டதால், ஒரு மணி நேரமாக இருட்டில் நடந்த அந்த சமாதான கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. பழனிராஜன் போட்டியிடுவதில் அவரது சமுதாயத்தினர் உறுதியாக உள்ளனர்.

