கனவு இல்லம் திட்டத்தில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள்
கனவு இல்லம் திட்டத்தில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள்
ADDED : மார் 15, 2025 12:54 AM
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில், வரும் நிதியாண்டில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள், 3,500 கோடி ரூபாய் மதிப்பில் கட்டும் பணி துவக்கப்படும்
முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 6,100 கி.மீ., நீளமுள்ள கிராம சாலைகள், 2,200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். தொடர் பராமரிப்புக்கு, 120 கோடி ரூபாய் விடுவிக்கப்படும்
அரசு மானிய திட்டத்தில் கட்டப்பட்டு பழுதடைந்த 25,000 வீடுகள், 600 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி தரப்படும்
கிராமங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 2,329 கிராம ஊராட்சிகளில், 1,087 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும்
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய, 3,796 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்
இந்த பட்ஜெட்டில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு, 29,465 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.