ADDED : ஏப் 02, 2024 05:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாநிலம் முழுதும் நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், நீடாமங்கலம், 2; நாகுடி, கமுதி, 1 செ.மீ., மழை பெய்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, தர்மபுரி, கரூர் பரமத்தியில், 104 டிகிரி பாரன்ஹீட் அளவான, 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
மதுரை, நாமக்கல், பாளையங்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருப்பத்துார், திருச்சி, திருத்தணி மற்றும் வேலுார் உள்பட, 11 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி, வெப்பம் பதிவாகியுள்ளது.
தெற்கு டெல்டா மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில், வறண்ட வானிலை நிலவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

