ADDED : ஜூலை 03, 2024 10:02 PM
சென்னை:தென்மேற்கு பருவமழை வடமாநிலங்களுக்கு பரவியுள்ளதால், தமிழக பகுதிகளில் தீவிரம் குறைந்துள்ளது. இதனால், கடந்த சில தினங்களாக, தமிழகம், புதுச்சேரியில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, மதுரை விமான நிலையத்தில், 40 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், ஈரோடு, கரூர் பரமத்தி, திருச்சி, 38; பாளையங்கோட்டை, மதுரை, துாத்துக்குடியில், 39 டிகிரி செல்ஷியஸ் என, எட்டு இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவானது. தமிழகம், புதுச்சேரியில் வரும், 9ம் தேதி வரை, சில இடங்களில் மிதமான மழை பெய்யும். தற்போதைய வெப்ப நிலை நீடிக்கும்.
சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் திடீர் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சம், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகும்.
நேற்று காலை நிலவரப் படி, பந்தலுார், அவலாஞ்சி, தேவாலா, சின்னக்கல்லாரில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது.