தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 10ம் வகுப்பு மறுமதிப்பீடு 3000 பேர் மதிப்பெண் மாற்றம்

10ம் வகுப்பு மறுமதிப்பீடு 3000 பேர் மதிப்பெண் மாற்றம்

10ம் வகுப்பு மறுமதிப்பீடு 3000 பேர் மதிப்பெண் மாற்றம்


ADDED : ஜூன் 28, 2024 02:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2024 02:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடும்; 10ம் வகுப்புக்கு மறுகூட்டல் வசதி மட்டும் நடைமுறையில் இருந்தது. 10ம் வகுப்புக்கும் மறுமதிப்பீடு முறை வேண்டும் என்ற, மாணவர்களின் கோரிக்கை, நம் நாளிதழில் செய்தியாக வெளியானது.

இதையடுத்து, இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுகூட்டல் மட்டுமின்றி, மறுமதிப்பீடும் அறிமுகமானது. இந்த திட்டம் அறிமுகமான நிலையில், 5000க்கும் மேற்பட்ட, 10ம் வகுப்பு மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். அவர்களுக்கான முடிவுகள்www.dge.tn.gov.in/என்ற இணையதளத்தில் நேற்று வெளியாகின.

மறுதிருத்தம் செய்ததில், 3022 மாணவ, மாணவியருக்கு, விடைகளில் மாற்றம் உள்ளதாக பட்டியல் வெளியிடப்பட்டது. மறுமதிப்பீடு முறை அறிமுகமான முதல் ஆண்டிலேயே இவ்வளவு அதிகமான மாணவர்களுக்கு, மதிப்பெண் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வில், 1959 பேருக்கும், பிளஸ் 1ல், 491 பேருக்கும் மதிப்பெண் மாறியது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us