ADDED : மார் 29, 2024 12:29 AM
சென்னை:ரயில் பாதை மேம்பாட்டு பணி நடப்பதால், நாகர்கோவில் - கன்னியாகுமரி உட்பட, 11 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.
★ நாகர்கோவில் - கன்னியாகுமரி காலை 10:35 மணி ரயில், நாகர்கோவில் - கொச்சுவேலி முன்பதிவு இல்லாத காலை 8:20 மணி ரயில், திருநெல்வேலி - நாகர்கோவில் காலை 7:10 மணி முன்பதிவு இல்லாத ரயில் மார்ச் 29, ஏப்., 1ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது
★ நாகர்கோவில் - திருநெல்வேலி மாலை 6:50 மணி ரயில், நாகர்கோவில் - திருநெல்வேலி முன்பதிவு இல்லாத ரயில் , கன்னியாகுமரி - கொல்லம் மாலை 4:00 மணி ரயில், கொல்லம் - கன்னியாகுமரி காலை 11:35 மணி ரயில் மார்ச் 29, ஏப்., 1ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது
★ கொல்லம் - ஆலப்புழா காலை 9:05, ஆலப்புழா - கொல்லம் மதியம் 1:05, கொல்லம் - திருவனந்தபுரம் மாலை 3:55, திருவனந்தபுரம் - நாகர்கோவில் மாலை 6:00 மணி ரயில்கள் மார்ச் 29ம், ஏப்., 1ம் தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

