ஆண்டிபட்டி அருகே வீட்டில் 11 பவுன் நகைகள் திருட்டு
ஆண்டிபட்டி அருகே வீட்டில் 11 பவுன் நகைகள் திருட்டு
ADDED : மே 13, 2024 07:35 AM
ஆண்டிபட்டி : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வீரபாண்டி சித்திரை திருவிழாவிற்கு சென்றவர் வீட்டில் இருந்த 11 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ராஜதானி அருகே ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி 43. தனது தம்பி குடும்பம், பெற்றோருடன் கூட்டு குடும்பமாக வசிக்கிறானர். மே 8ல் வீரபாண்டி கோயில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் சென்று விட்டு, மறுநாள் காலை வீட்டிற்கு வந்து அசதியில் துாங்கி விட்டனர். மே 10ல் கருப்பசாமி தம்பி மனைவி பவித்ரா அணிந்திருந்த நகைகளை கழற்றி பீரோவில் வைத்துள்ளார்.
அப்போது ஏற்கனவே பீரோவில் இருந்த மோதிரத்தை காணவில்லை. இதுகுறித்து பவித்ரா மற்றவர்களிடம் தெரிவித்தார். கருப்பசாமி, மனைவி வீட்டில் அவர்களுக்கு சொந்தமான பீரோவில் பார்த்துள்ளனர். பீரோவில் இருந்த 30 பவுன் நகையில் சில நகைகள் என மொத்தம் 11 பவுன் நகைகளை காணவில்லை. ராஜதானி எஸ்.ஐ., ஜெகநாதன் விசாரிக்கிறார்.