லாரி மீது அரசு பஸ் மோதல் வடலுாரில் 12 பயணிகள் காயம்
லாரி மீது அரசு பஸ் மோதல் வடலுாரில் 12 பயணிகள் காயம்
ADDED : மார் 25, 2024 04:53 AM
வடலுார்: வடலுார் அருகே லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 12 பயணிகள் படுகாயமடைந்தனர்.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் இருந்து வடலுார் நோக்கி நேற்று காலை அரசு பஸ் சென்றது. சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் கிராமத்தை சேர்ந்த குலோத்துங்கசோழன், 44; ஓட்டிச்சென்றார். வடலுார் அடுத்த மருவாய் கிராமத்தில் 7:30 மணிக்கு பஸ் வந்தபோது, முன்னாள் திருநள்ளாறில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்ற லாரி மீது திடீரென மோதியது.
இதில், பஸ் கண்டக்டர் முருகேசன், 53; பயணிகள் பாப்பாக்குடியை சேர்ந்த ரவிச்சந்திரன்,58; மேலணிக்குழி தங்கராசு, 68; குமாரக்குடி மலர்கொடி,49; உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த வடலுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

