ADDED : செப் 09, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: -சிதம்பரம் அருகே 13வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியிலுள்ள அரசுப்பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீர் வயிற்றுவலி ஏற்பட்டது.
சிறுமியின் பெற்றோர், அண்ணாமலைநகர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்ததில், வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததும், அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார், வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.