உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஏப் 04, 2024 06:16 AM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் நேற்று காலை வரை, 141.31 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாநிலம் முழுதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகளும், ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை வரை, 62.59 கோடி ரூபாய் ரொக்கம், 3.68 கோடி ரூபாய் மதுபானம், 74 லட்சம் ரூபாய் போதைப்பொருள், 59.42 கோடி ரூபாய் தங்கம், வெள்ளி நகைகள், 14.88 கோடி ரூபாய் இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்த மதிப்பு 141.31 கோடி ரூபாய்.
