சார் -பதிவாளரிடம் ரூ.14,800 பறிமுதல் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை
சார் -பதிவாளரிடம் ரூ.14,800 பறிமுதல் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை
ADDED : ஜூலை 16, 2024 02:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்துார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன், மாவட்ட இணை பத்திரப்பதிவு அலுவலர் பாலமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று மாலை 5:30 மணிக்கு சோதனையில் ஈடுபட்டனர்.
சார் பதிவாளர் கார்த்திகேயன் வீட்டிற்கு செல்ல தயாராக இருந்தவரிடம் சோதனை செய்ததில் டிபன் பாக்ஸ், உணவு பையில் வைத்திருந்த கணக்கில் வராத ரூ.14,800 கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த அலுவலகத்தில் சோதனை செய்து சில முக்கிய ஆவணங்களையும், பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

