15 இடங்களில் சதமடித்த வெயில்: ஈரோட்டில் 107 டிகிரி
15 இடங்களில் சதமடித்த வெயில்: ஈரோட்டில் 107 டிகிரி
ADDED : ஏப் 07, 2024 08:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், இன்று மாநிலம் முழுவதும் 15 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது.
ஈரோட்டில் தொடர்ந்து வெயில் அதிகமாக அடித்து வருவதால் வெயில் பதிவு அதிகம் உள்ள மாவட்டத்தில் இந்த மாவட்டம் முன்னணியில் உள்ளது. இன்று ஈரோட்டில் 108 டிகிரி வெயில் ,திருப்பூரில் 105, அருப்புக்கோட்டை ,விருதுநகரில் 104, தென்காசி, கோவில்பட்டியில் 103, திருநெல்வேலியில் 100 டிகிரி வெயில் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

