ADDED : ஜூலை 31, 2024 07:34 AM

போடி: திண்டுக்கல் கக்கன் நகரை சேர்ந்தவர் சதீஸ்வரன், 37, போடி பாலார்பட்டி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கபில்தேவ், 25, தினேஷ், 25, உப்புக்கோட்டை மேலத் தெரு சிவானந்தம், 50, கூடலூர் லோயர் கேம்ப் பஸ் ஸ்டாண்ட் அருகே வசிப்பவர் சிலம்பரசன், 40, ஆகிய 5 பேரும் சேர்ந்து, தேனி மாவட்டம் போடி பரமசிவன் கோவில் தெருவில் உள்ள நகை அடகு கடையில் தங்கம் முலாம் பூசிய 15 சவரன் நகையை அடகு வைக்க முயன்றுள்ளனர்.
சந்தேகமடைந்த கடை உரிமையாளர் சேகர், 56, நகையை பரிசோதித்த போது போலி என தெரிந்தது. தகவலறிந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
விசாரணையில், திண்டுக்கல் அருகே எரியோட்டை சேர்ந்த பாலகிருஷ்ணன், இளையராஜா, தேனி பாலார்பட்டி செல்வம் என்பவரின் ஏற்பாட்டில் வந்ததாகவும், காரில் வந்த இளையராஜா தப்பி சென்றதும் தெரிந்தது. தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

