உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஏப் 04, 2024 11:36 PM
அ நிறம் | அளவு
சென்னை:தமிழகம் முழுதும் நேற்று வரை, 168.45 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தலையொட்டி, மாநிலம் முழுதும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
நேற்று காலை வரை, 74.08 கோடி ரூபாய் ரொக்கம்; 3.97 கோடி ரூபாய் மதுபானம்; 79 லட்சம் ரூபாய் போதைப் பொருட்கள்; 74.41 கோடி ரூபாய் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்; 15.20 கோடி ரூபாய் இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இவற்றின் மொத்த மதிப்பு, 168.45 கோடி ரூபாய்.
