உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 14, 2024 12:48 AM
அ நிறம் | அளவு
சென்னை:''பி.எட்., படிப்பில் சேர, வரும் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்,'' என, அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
தலைமை செயலகத்தில், அவர் அளித்த பேட்டி:
பொறியியல் கல்லுாரி, கலை மற்றும் அறிவியல் கல்லுாரி யில் மாணவர் சேர்க்கை, வரும் 23ம் தேதி வரை நடக்கும். பி.எட்., படிப்பில் சேர, www.tngasa.in என்ற ஆன்லைனில், 16 முதல், 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தர வரிசை, 30ல் வெளியாகும்.
மாணவர் சேர்க்கை அக்., 14ல் துவங்கி, 19ல் நிறைவடையும். முதல் ஆண்டு வகுப்பு அக்., 23ல் துவங்கும். அரசு கல்லுாரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 2,040 பி.எட்., இடங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
