ADDED : மார் 09, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு, அரிசிக்கு பதில் 5 கிலோ வரை கோதுமை இலவசமாக வழங்கப்பட்டது.
இதற்காக மாதம், 17,100 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், இம்மாதத்தில் இருந்து கோதுமை ஒதுக்கீடு, 8,576 டன்னாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், ஒரு கார்டுதாரருக்கு, 2 கிலோ கோதுமை வழங்குமாறு, கடை ஊழியர்களை தமிழக உணவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
மேலும், தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கியது போல் கூடுதல் கோதுமை ஒதுக்கீடு செய்யுமாறு, மத்திய உணவுத் துறையிடம் வலியுறுத்தி உள்ளது.