கொத்தனாருக்கு கத்திவெட்டு வங்கி ஊழியர் உட்பட 2 பேர் கைது
கொத்தனாருக்கு கத்திவெட்டு வங்கி ஊழியர் உட்பட 2 பேர் கைது
ADDED : செப் 08, 2024 05:36 AM

கண்டமங்கலம்: கொத்தனாரை கத்தியால் வெட்டிய, வங்கி ஊழியர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கண்டமங்கலம் அடுத்த கோண்டூரைச் சேர்ந்தவர் மணிகண்டன்,38; கொத்தனார். இவர் தனியார் வங்கியில் கடன் வாங்கியுள்ளார்.
அதற்கான தவணை தொகையை, மாதா, மாதம் வங்கி ஊழியரான பாக்கம் மேட்டு தெருவைச் சேர்ந்த பாண்டியன்,30; மூலம் செலுத்தி வந்துள்ளார். இந்த மாதத்திற்கான தவணை தொகையை பெற பாண்டியன் வரவில்லை.
இதனால் வங்கி நிர்வாகம், மணிகண்டன் வங்கி கணக்கில் இருந்து அபராதத்துடன் மாத தவணை தொகையை பிடித்தம் செய்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் கடந்த 5ம் தேதி இரவு பாக்கம் கால்நடை மருத்துவனை அருகே நின்றிருந்த பாண்டியனிடம் தகராறு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டியன் மற்றும் அவரது நண்பரான கோண்டூர் குளத்துமேட்டு தெருவைச் சேர்ந்த அய்யப்பன், 30; ஆகியோர் கத்தியால் மணிகண்டன் கையில் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். படுகாயம் அடைந்த மணிகண்டன் அரசு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார்.
புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து பாண்டியன், அய்யப்பன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.