காரில் 232 கிலோ கஞ்சா கடத்தல் திண்டிவனம் அருகே 2 பேர் கைது
காரில் 232 கிலோ கஞ்சா கடத்தல் திண்டிவனம் அருகே 2 பேர் கைது
ADDED : ஜூலை 21, 2024 05:40 AM
திண்டிவனம்: திண்டிவனம் அருகே காரில் கடத்த முயன்ற 232 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கேரளாவை சேரந்த இருவரை கைது செய்தனர்.
திண்டிவனம் டி.எஸ்.பி., சுரேஷ்பாண்டியன் தலைமையில் ஒலக்கூர் குற்றப்பிரிவு போலீசார் நேற்று மாலை 3:30 மணிக்கு பாதிரி கிராமத்தில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த பொலிரோ பிக்கப் லோடு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 116 பாக்கெட்டுகள் கொண்ட 232 கிலோ கஞ்சா கடத்தி வருவதை கண்டுபிடித்தனர்.
விசாரணையில், கேரளா மாநிலம், காசர்கோடு பகுதியை சேர்ந்த தாமோதரன் மகன் உதயகுமார்,44; சலாம் மகன் ஆசிப்,25; என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்கள் கடத்தி வந்த 232 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பொலிரோ பிக்கப் லோடு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்ட இருவரும் எங்கிருந்து, யாரிடம் இருந்து கஞ்சா வாங்கி எங்கு கடத்தி செல்கின்றனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.