ADDED : ஆக 04, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்த 21 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்.
கடந்த ஜூலை முதல் வாரத்தில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் என, 21 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களை விடுவிக்க கோரி, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதையடுத்து, இந்திய துாதரக அதிகாரிகள், இலங்கை அரசிடம் பேச்சு நடத்தினர். இந்நிலையில், 21 மீனவர்களை விடுவிக்க, இலங்கை நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன் அனுமதி அளித்தது. அவர்கள் கொழும்பில் இருந்து நேற்று காலை விமானத்தில் சென்னை திரும்பினர்.