ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் விற்பனை; அட்சய திருதியைக்கு அள்ளிய பெண்கள்
ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் விற்பனை; அட்சய திருதியைக்கு அள்ளிய பெண்கள்
UPDATED : மே 11, 2024 04:25 AM
ADDED : மே 11, 2024 12:09 AM

சென்னை:அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்க மக்கள் அதீத ஆர்வம் காட்டியதால், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும், 25,000 கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளது. இதன் மதிப்பு, 16,750 கோடி ரூபாய்.
தமிழகம் உட்பட நாடு முழுதும், அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கினால், தங்களிடம் உள்ள செல்வம் மேலும் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
இதனால் அன்று, பலரும் தங்கம் வாங்குகின்றனர். அதன்படி, நேற்று அட்சய திருதியை கொண்டாட்டம் துவங்கியது. இது, நாளை வரை கொண்டாடப்படுகிறது.
நகை வாங்குவதற்காக பலரும் நகை கடைகளுக்கு சென்று, விரும்பிய நகைகளை தேர்வு செய்து, அதற்கு உரிய பணமும் செலுத்தி முன்பதிவு செய்து வந்தனர்.
அவர்கள் நேற்று, நகை கடைகளுக்கு சென்று, தாங்கள் செலுத்திய ரசீதுகளை கடைகளில் சமர்ப்பித்து நகைகளை வாங்கினர்.
![]() |
வாடிக்கையாளர்களின் வசதிக்காக நகை கடைகள் காலை, 6:00 மணிக்கே திறக்கப்பட்டன.
வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் காலையிலேயே சென்று நகைகளை வாங்கினர். இதனால், காலை நகை கடைகளை திறந்தது முதல் நள்ளிரவு மூடப்பட்டது வரை மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஏழை, பணக்காரர்கள் என்ற பாரபட்சம் இல்லாமல், பலரும் தங்களின் வசதிக்கு ஏற்ப ஒரு கிராம் முதல் அதிக சவரன் வரை நகைகளை வாங்கினர். நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில், 25,000 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளது.
நேற்று, கிலோ 22 காரட் ஆபரண தங்கம் விலை, 67 லட்சம் ரூபாய். எனவே, நேற்று விற்பனையான தங்கத்தின் மதிப்பு, 16,750 கோடி ரூபாய்.
கடந்த ஆண்டு அக் ஷய திருதியைக்கு தங்கம் விற்பனை, 20,000 கிலோ என்றளவில் இருந்தது.
அட்சய திருதியை இன்றும், நாளையும் நீடிப்பதால், இந்தாண்டு அட்சய திருதியைக்கு, தங்கம் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
![]() |