சென்னை சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு
சென்னை சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு
UPDATED : ஆக 01, 2024 08:16 PM
ADDED : ஆக 01, 2024 06:13 PM

சென்னை: சென்னையில் நிகழ்ந்த சாலை விபத்தில் காரில் பயணம் செய்த சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர். .
சென்னையில் ஹிந்துஸ்தான் சட்டகல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் ஐந்து பேர் பல்கலை கழகத்தில் இருந், படூர் பைபாஸ் சாலை வழி்யாக காரில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது வேக கட்டுப்பாட்டை இழந்த கார் பல முறை பல்டி அடித்து விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தில் காரில் பயணித்த ஐந்து பேரில் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் படுகாயம் அடைந்த மற்றொரு மாணவி, மாணவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சி்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற் றுவந்த ஒருவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆகஉயர்ந்தது.