ADDED : ஜூன் 25, 2024 01:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சென்னையில் இருந்து மெத்தனால் வாங்கி விற்ற மாதேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு தனியார் நிறுவனங்களில் இருந்து மெத்தனால் வாங்கி கொடுத்த, சென்னை மதுரவாயல் சிவக்குமார் உள்ளிட்ட 12 பேரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி ஏமப்பேர் தெய்வீகன், 35, சூளாங்குறிச்சி அய்யாசாமி, 55, அரிமுத்து ஆகியோரை கைது செய்தனர்.
இதில், சிவக்குமார், சென்னையில் உள்ள தனியார் கெமிக்கல் நிறுவனங்களில், மெத்தனால் வாங்கி விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தனியார் கெமிக்கல் நிறுவன உரிமையாளர்கள் ஐந்து பேர் உட்பட மொத்தம் ஏழு பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.