ADDED : ஏப் 28, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கூட்டுறவு துறையின் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன், நகைக்கடன் உட்பட பல பிரிவுகளில் கடன் வழங்கப்படுகின்றன.
அதன்படி, ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது.
நடப்பு, 2024 - 25ம் நிதியாண்டில், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு, 2,500 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதில், மீன் வளர்ப்பு சார்ந்த தொழில்களுக்கு, 300 கோடி ரூபாய் கடன் வழங்க கூட்டுறவு வங்கிகளுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதிக அளவாக, காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில், 100 கோடி ரூபாய் கடன் வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

